என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சாத்வி பிரக்யா
நீங்கள் தேடியது "சாத்வி பிரக்யா"
குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை இல்லை என மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SadhviPragya #LokSabhaElection
மும்பை:
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தற்போது மத்தியபிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்தநிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் எனக்கோரி, மாலேகான் குண்டுவெடிப்பில் மகனை இழந்த நிசார் சையது என்பவர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நிசார் சையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இது குறித்து நீதிபதி, ‘ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க இந்த கோர்ட்டுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. இது தேர்தல் அதிகாரிகளின் வரம்புக்கு உள்பட்டதாகும். எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டார். #SadhviPragya #LokSabhaElection

திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #BJP #SadhviPragya #DigvijayaSingh
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங்கை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த நிலையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது. போபால் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க.வின் கோட்டையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. 1989-ம் ஆண்டு பிறகு 8 முறை அக்கட்சி இந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. #BJP #SadhviPragya #DigvijayaSingh
மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங்கை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த நிலையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர், ஸ்ரீகாந்த் புரோஹித் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. #MalegaonBlast #ColPurohit
மும்பை:
இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர்.
2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.
அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகிய மூவர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். #MalegaonBlast #ColPurohit
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர்.
2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.
அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகிய மூவர் கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். #MalegaonBlast #ColPurohit
×

X